திருமண நிதி உதவி
நம் இன கன்னி பெண்கள் கண்ணீர்ப் பூக்களாகி விடக்கூடாது. அவர் தம் திருமணம் நிதிவசதிக்
குறைவால் தடைப்படக் கூடாது என்கிற நல்லெண்ணத்தில், நகரத்தார் சமூகத்தில் இன்று நலிந்த
பிரிவினரின் பெண்கள் திருமணத்திற்கு நிதியுதவி செய்வதை, கூட்டமைப்பு தலையாய கடமையாகக்
கருதி செயல்பட்டு வருகின்றது. பெணகள் திருமண நிதியுதவியாக ஒரு வராகன் (ரூ.3,500) வழங்கப்படுகிறது.
முதல் நிதி உதவி விண்ணப்பம் 11/11/1991 அன்று கலந்துரையாடலில் தேர்வு செய்யப்பெற்று
அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த 09/07/2010 நடைபெற்ற 128 வது கலந்துரையாடல் வரை கூட்டமைப்பின்
நிதி ஆதரங்களிலிரு ந்தும், தனிப்பட்ட நபர்களின் அன்பளிப்பாலும் இதுவரை 946 திருமணங்களுக்கு
இந்திய ரூபாய் 33,14,431/=(முப்பத்துமூன்று இலட்சத்து பதினான்காயிரத்து நானூற்று முப்பத்தியொன்று)
அளிக்கப்பட்டுள்ளது என்பது ஒரு வியத்தகு சாதனையே. நிதி உதவிப் பெறுவதற்கான வழிமுறைகள்
- திருமண செய்தி போன்ற விவரங்களோடு குடும்ப சூழ்நிலையை விளக்கி, நிதி உதவிகோரும் விண்ணப்பக்
கடிதம் உரியவர்களால் கூட்டமைப்பிற்கு அனுப்பபட வேண்டும். விண்ணப்பத்துடன் திருமண அழைப்பு,
நகரச்சிவன் கோவில் அல்லது நகரத்தார் சங்கங்கள் அல்லது நகரத்தார் பிரமுகர்களின் பரிந்துரையோடு
அனுப்பப்பெற வேண்டியது அவசியம்.
- தாயகத்திலிருந்து நிதியுதவி கோரி ஏராளமான விண்ணப்பங்கள் வந்த வண்ணம் இருப்பதால் அவற்றைப்
பரிசீலித்து, அமைப்பின் நிதி நிலைமை மற்றும் வரவு-செலவு திட்டத்தைக் கருத்தில் கொண்டு
வரும் விண்ணப்பங்கள் குலுக்கள் முறையில் தேர்வு செய்ய்ப்பெற்று அனுப்பி வைக்கப்பெறும்.
கல்வி நிதி உதவி
இன்றைய இளைஞனே நாளைய சமூகம்.அறிவிலும், புத்திக் கூர்மையிலும், சூட்டிகையிலும் சிறந்து
விளங்கும் நம் பிள்ளைகளின் கல்வி இன்று அவர்தம் குடும்பம் எதிர்கொள்ளும் பொருளாதார
நலிவால் தடைபபடக்கூடாது என்கிற எண்ணத்தில் நம் சமூகத்தில் இன்று வசதி குறைவானவர்க்ளின்
கல்விக்கு நிதி உதவி செய்தலும் கூட்டமைப்பின் தலையாய செயல்பாடுகளில் ஒன்றாகும். முதல்
கல்வி நிதி உதவி 1992 -ஆம் ஆண்டு வழங்கப்பெற்றது. கடந்த 09/07/2010 நடைபெற்ற 128 வது
கலந்துரையாடல் வரை கூட்டமைப்பின் நிதி ஆதரங்களிலிரு ந்தும், தனிப்பட்ட நபர்களின் அன்பளிப்பாலும்
இதுவரை இந்திய ரூபாய் 9,07,409/= (ஒன்பது இலட்சத்து ஏழாயிரத்து நானூற்று ஒன்பது) உதவியாக
வழங்கப்பட்டுள்ளது. இந்நிதியைப் பெறுவதற்கான தகுதியும் வழிமுறைகளும்
- பொருளாதார வசதி குறைவானவராக இருத்தல் வேண்டும்.
- மாணவன், தந்தை/தாய் அல்லது தாளாளர் விண்ணப்பிக்க வேண்டும்.
- கடந்த தேர்வின் மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட வேண்டும்.
- கல்வி நிறுவனத்திலிருந்து படிப்பிற்க்கான சான்றிதழ் வேண்டும்.
- நகரத்தார் சங்கம்/ நகரச் சிவன் கோவில்/ நகரத்தார் பிரமுகரின் பரிந்துரை.
- கல்வி நிறுவனத்தின் கட்டண விவரங்கள் பற்றிய குறிப்பு.
மேற்கண்டவை விண்ணப்பத்தோடு இணைத்து எங்களது முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மிதமிஞ்சிய
விண்ணப்பங்கள் வந்த வண்ணம் இருப்பதால், ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியை கருத்தில்
கொண்டு, விண்ணப்பங்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து நிதி அனுப்பி வைக்கப்படுகிறது.
இது வரை கல்வி நிதியாக இந்திய ரூபாய் 9,07,409/= (ஒன்பது இலட்சத்து ஏழாயிரத்து நானூற்று
ஒன்பது) வழங்கி இருக்கிறார்கள்.இது ஒரு பாராட்டத்தக்க பணியாகும்.
ஏனைய நிதி உதவிகள்
- நம் இனத்தாரின் நலிவுற்ற சிலரின் மருத்துவ சிகிச்சைக்கு என சிறப்பு நிதி உதவியாக இது
வரை ஏறத்தாழ ரூ. 1,75,000/- வழங்கப்பட்டுள்ளது.
- நகரத்தார் இளைஞர் ஒருவரின் செட்டிநாட்டு நிலைக் கதவுகளில் உள்ள சித்திர வேலைப்பாடு
உள்ள சூரியபலகை குறித்த ஆராய்ச்சிக்கு நிதி உதவியாக கணிசமான தொகை வழங்கப்பட்டுள்ளது.
- குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் முகமாக சதுரங்க விளையாட்டு வீரர்,
மாஸ்டர்.பிரியதர்சனுக்கு நிதி உதவி செய்து கெளரவிக்கப்பட்டது.
- செந்தூர் நகரவிடுதி புணரமைப்பிற்கெனக் கூட்டமைப்பின் சார்பில் ரூ.50,001/- அன்பளிப்பாக
வழங்கப்பட்டது.
- கூட்டமைப்பைச்சார்ந்த வைரவன் கோவில் பங்காளிகள் வைரவன் கோவில் குடமுழுக்கு புணரமைப்பில்
“வேதியியல் கழுவலுக்கென” (Chemical Washing) ரூ.3,00,001/- நிதி அளித்துள்ளார்கள்.
- கார்கில் போரில் உயிர் நீத்த வீரர்களின் குடும்பத்திற்க்கு என கூட்டமைப்பைச் சார்ந்த
குழந்தைகள் நிதி உறுப்பினர்களிடம் பெற்று சுமார் ரூ.30,000/- நிதி உதவி செய்துள்ளார்கள்.
இப்படி அனைத்து நிதி உதவிகளையும் சேர்த்து ஏறத்தாழ ரூ. 56,70,614/= (ஐம்பத்தாறு
இலட்சத்து எழுபதாயிரத்து அறுன்னூற்று பதிநான்கு) இதுவரைகூட்டமைப்பினால் நிதி
உதவியாக அளிக்கப்பட்டுள்ளது.
|
Enquiries
|
Contacts
|
|
திருமணம் / கல்வி / ஏனைய நிதி உதவி கோரி அனுப்பப்படும் அனைத்து வகையான விண்ணப்பங்கள்
மற்றும் கடித போக்குவரத்துக்கும் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
|
The Secretary,
Post Box No: 27658,
Sharjah, UAE.
|
|
For other queries :
|
Email: help@nagarathars.com
Website: www.nagarathars.com
|