Our Traditions Find out more...
Park meeting 2011.. Find out more...
Participants at 125th meeting. Find out more...
Participants at 125th meeting. Find out more...
Participants at 125th meeting. Find out more...

Our Community - Nagarathar Kootamaipu [INK]

Organised by Nagaratar's committee members

'UAE Nagarathar Kootamaipu' is a group of Nagarathars who live in UAE-Covering Abu Dhabi, Al Ain, Ajman, Dubai, Fujairah, Ras al-Khaimah, Sharjah, and Umm al-Quwain. Nagarathars are Tamil speaking culture oriented people and called as Nattukottai Nagarathar Chettiar. This online group is to promote communication amongst members who are part of the Kootamaippu.

/system/_temp/images/LordMurugan.jpg
136 Kalanthuraiyadal
Place  :   Sharjah, Kaththari Pannai
Function Date  :   11-Nov-2011
Uploaded Date  :   2011
ஷார்ஜாவில் நடைபெற்ற நகரத்தார் சங்கத்தின் 136-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நிரல் அல்-கத்தாரி பண்ணை இல்லத்தில் 11.11.2011,வெள்ளிக்கிழமை அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இறை வணக்கப் பாடல்களை குழந்தைகள் செல்வி. அபிராமி முத்துராமன், செல்வி.ஐஸ்வர்யா முத்து மாணிக்கம் மற்றும் திரு.முத்து மாணிக்கம் ஆகியோர் பாடினார்கள். திருக்குறள் பொருளுரையோடு செல்வன்.இராமநாதன் முத்துக்கருப்பன் வழங்கினார். மகளிர்க்காக நடு வீட்டுக் கோலப் போட்டி நடைபெற்றது. ஆறு குழுக்களாக மகளிர் கோலப் போட்டியில் பங்கு பெற்றனர். செல்வி.கண்ணாத்தாள் முத்துராமன் மற்றும் செல்வி.மெய்யம்மை வள்ளியப்பன் பரத நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வு இச்செயற்குழு உறுப்பினர்களின் பணி நிறைவு ஆதலால் கடந்த இரண்டு ஆண்டுகளின் நிகழ்வுகளை தொகுத்தும், புதிய உறுப்பினர்களுக்கு வரவேற்பும் அளித்து திரு.வீர.அழகப்பன் அவர்கள் தலைவர் உரை நிகழ்த்தினார்கள். அடுத்த கலந்துரையாடலில் இருந்து திரு.சோழபுரம் இரமேஷ் அவர்கள் தலைமையில் சங்க கூட்டங்கள் நடைபெறும் என பொதுக்குழுவால் தீர்மானிக்கப்பட்டு , நிர்வாகக் குழு, செயற் குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தப்பட்டார்கள். குழந்தைகளின் இசைக் கச்சேரியும், செல்வி.சுபஸ்ரீ மற்றும் அனுஸ்ரீ மணிகண்டன் ஆகியோரின் அனுமன் பாடல்களும் பாடப்பெற்றன.நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்த்தினராக வருகை தந்திருந்த SUN TV புகழ் "அசத்தப் போவது யாரு" புகழ் தேவக்கோட்டை இராமநாதன் வந்திருந்து நகைச்சுவையை வாரித் தந்தார்கள்.அதன் பின்பு அனைத்து குழந்தைகளுக்கும், போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும்,அனைத்து குடும்பத்தார்க்கும் சங்கத்தின் சார்பாக நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டன.நன்றியுரை செயலாளர்,திரு.மு.சுவாமிநாதன் வழங்க சங்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
/system/_temp/images/LordMurugan.jpg
135 Kalanthuraiyadal
Place  :   Dunes Hotel Apartments
Function Date  :   11-Nov-2011
Uploaded Date  :   2011

நகரத்தார் சங்க கூட்டமைப்பின் 135-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியானது துபாயில் உள்ள Dunes Hotel Apartments -ல் காலை 10.30 மணியளவில் இனிதே தொடங்கப் பெற்றது.இந்நிகழ்ச்சி பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக முழு நிகழ்ச்சிகளையும் பெண்களே செய்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சிகள் அனைத்தையும் திருமதி.தெய்வானை முத்துராமன் மற்றும் திருமதி.தெய்வா முத்துராமன் கதிரேசன் ஆகியோர் இணைந்து மிகச் சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள்."கடவுள் வாழ்த்து""-செல்வி.நந்தினி சரவணன் மற்றும் "திருக்குறள் ஒப்புவித்தல்"-செல்வி.பிரவீணா சண்முகம் தந்து நிகழ்ச்சிகளை துவக்கி வைத்தனர்.இனிய நடனத்தை செல்வி.மீனாட்சி முத்துராமன் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து சங்கத்தின் நடவடிக்கைகள் பற்றி தலைவர் வீர.அழகப்பன் உரையாற்றினார்கள். குழந்தைகளின் ஆங்கில புலமையை அறிய இராம.நாகப்பன் "கட்டுரைப் போட்டியை"நடத்தி தந்தார்கள்.குழந்தைகளின் இந்த மொழியாற்றல் பற்றி எண்ணும் போது மிகுந்த வியப்பைப் பெற்றுத் தந்தது என்பதும் அதனை அப்பொழுதே தமது கற்பனைத்திறனை செதுக்கி தந்த கட்டுரைகளையும் படித்தபோது மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது.சினிமா சம்பந்தப்பட்ட வினாடி-வினா நிகழ்ச்சியில் செல்வி.மெய்யம்மை வள்ளியப்பன் மற்றும் செல்வி.கண்ணாத்தாள் முத்துராமன் ஆகியோர் இணைந்து நடத்தினார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆவலுடன் பங்கு பெற்றார்கள். உலக தமிழ் பொருளாதார மாநாடு அக்டோபர் மாதத்தில் நடக்க உள்ளமைக்கு வரவேற்பதற்காக டாக்டர்.வாசன், திரு.மோகன் மற்றும் UAE தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திருமதி.ஜெயந்தி சுரேஷ் அவர்களும் வந்து மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தார்கள்.குழந்தைகளும் பெண்களும் சேர்ந்து மேடையில் இசை நாடகம்- எழுத்துப் பட்டறை குழுவினரால் நடத்தப்பட்டது.குழந்தைகளுக்காக நடையழகு போட்டி நடைபெற்றது.புதிய உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தபட்டது.வழக்கம் போல் திருமணம் மற்றும் கல்விக்கு நிதி உதவிகள் வழங்கப்பட்டன. சங்கத்திற்காக இணையதளம் புதுப்பிக்கப்பட்டு அனைவரின் பார்வைக்கு அளிக்கப்பட்டது.(www.nagarathars.com). அதன்பின்பு, நீதிக்கதைக்கான நாடகம் சுபஸ்ரீ, அனுஸ்ரீ மணிகண்டன் மற்றும் காவேரி அருணாசலம் ஆகியோர் சிறப்பாக நடத்திக் கொடுத்தார்கள்.மதிய உணவிற்கு பிறகு நீங்களா! நாங்களா! நிகழ்ச்சியில் "நகரத்தார்கள் வெளிநாட்டு வாழ்க்கை பெற்றது அதிகமா? இழந்தது அதிகமா?"குழந்தைகள், பெண்கள் கலந்துக் கொண்டு வாதாடி வலிமை சேர்த்தார்கள்.அதிர்ஷ்ட குலுக்கல் நடைபெற்று,வெற்றி பெற்றவர்கள் அனைவருக்கும் மற்றும் அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.மாலை 5.30 மணியளவில் சங்கத்தின் செயலாளர் மு.சுவாமிநாதன் நன்றியுரை வழங்க சங்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
/system/_temp/images/LordMurugan.jpg
134 Kalanthuraiyadal
Place  :   Dubai. Bengalore Embire hotel
Function Date  :   11-Nov-2011
Uploaded Date  :   2011

ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் 134-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியானது துபாய்-கராமாவில் உள்ள "பெங்களூர் எம்பயர் உணவகத்தில்" காலை 11.00 மணிக்குத் துவங்கி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இறை வணக்கத்தை செல்வி.காவேரி அருணாசலம் பாடினார். திருக்குறள் ஒப்புவித்தலை செல்வன்.சோமசுந்தரம் ஸ்ரீனிவாசன் வழங்கினார். சங்கத்தின் வளர்ச்சி,நிர்வாகம்,மேம்பாடு போன்றவற்றை சங்கத்தின் தலைவர்,திரு.வீர.அழகப்பன் "தலைவர் உரையோடு" வழங்கி கெளரவித்தார்கள். அன்றைய தினம் அனைவரின் சிந்தனையை ஊக்குவிக்கின்ற வகையிலே "சிந்தனை நேரத்தில்"அமீரக நகைச்சுவை மன்றத்தின் தலைவர், திரு.குணசேகரன் அவர்கள் நகைச்சுவையோடு வழங்கி பெருமைப்படுத்தினார்கள்."நகரத்தாரும் தமிழும்"என்ற அழகான தலைப்பிலே முனைவர். முகமது உசேன் (தமிழ்த் துறை தலைவர்,அரசினர் கலைக்கல்லூரி,கும்பகோணம்) அவர்கள் உரை நிகழ்த்தி சிறப்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து சங்கத்தின் நடவடிக்கைகள் பற்றியும்,வழக்கம் போல் திருமணம் மற்றும் கல்வி நிதி உதவிகளுக்கு வந்திருந்த அனைத்து விண்ணப்பங்களுக்கும் உதவிகள் வழங்கப்பட்டன. புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்விக்கப்பட்டார்கள். சிறுவர் நிகழ்வு" நிகழ்ச்சியில் செல்வி.அனுஸ்ரீ மணிகண்டன் மிக அழகாக பாடினார்.குழந்தைகளிடையே சொல்வளம், பேச்சுத் திறமை, தமிழ் அறிவாற்றலையும் வளர்ப்பதற்காக சிறப்பு பட்டிமன்றம், "இன்றைய சூழலில் உறவுகள் இன்பமே! துன்பமே!"என்ற தலைப்பில் நடைபெற்றது.நடுவராக, சங்கத்தின் செயற்குழு உறுப்பினர், திரு.முத்து மாணிக்கம் அவர்கள் தலைமை தாங்கினார்கள். இன்பமே! என்ற தலைப்பில் செல்வி.கண்ணாத்தாள் முத்துராமன், மீனாட்சி முத்துராமன், சுபஸ்ரீ மணிகண்டன்,செல்வன்.ஜெய் சுந்தர் ஆகியோர் பங்கு பெற்றனர். துன்பமே! என்ற தலைப்பில் மெய்யம்மை வள்ளியப்பன், மீனாட்சி தேனப்பன், மீனாள் கண்ணன் மற்றும் அபர்ண ரமேஷ் ஆகியோர் பங்கு பெற்றனர்.எவரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு நடுவரின் நகைச்சுவையுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.மதியம் 2.00 மணியளவில் மதிய உணவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவருக்கும் திருக்குறள் புத்தகங்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பெற்றன. அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் வெற்றி பெற்ற திரு&திருமதி.சித.மணிகண்டன் தம்பதியருக்கு "ஏர்கூலர்"பரிசு வழங்கப்பட்டது.மாலை 3.30 மணியளவில் சங்கத்தின் செயலாளர்.திரு.மு.சுவாமிநாதன் அவர்கள் நன்றியுரை வழங்க சங்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
/system/_temp/images/LordMurugan.jpg
133 Kalanthuraiyadal
Place  :   Sharjah, Kaththari Pannai
Function Date  :   15-Apr-2011
Uploaded Date  :   2011

நமது ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் 133-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி, ஷார்ஜாவில் உள்ள "செட்டிநாடு விருந்தினர் இல்லத்தில்"(அல்-கத்தரி பண்ணை வீடு) 15.04.2011,வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணிக்கு மிகச் சிறப்பாக தொடங்கப்பெற்றது.நிகழ்ச்சியின் தொடக்கமாக பெண்களுக்கான மெஹந்தி போட்டி நடைபெற்றது.இறைவணக்கத்தை செல்வி.ஐஸ்வர்யா முத்துமாணிக்கம் வழங்கினார்.திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சியை செல்வன்.கார்த்திக் செல்ல கணபதி வழங்கினார்.11.00 மணியளவில் "தலைவர் உரையை" திரு.வீர.அழகப்பன் அவர்கள் வழங்கினார்கள்."தமிழ் புத்தாண்டு" மற்றும் "முனைவருக்கு ஓர் முகமன்" என்ற கவிதைகளை கவிஞர்.திரு.நா.தியாகராசன் அவர்கள் வழங்கினார்கள்.சங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு.N.லெட்சுமணன் அவர்கள் தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த முக்கிய விருந்தினர்,முனைவர்.பழ.சபாரத்தினம்(Retd.Registrar, Annamalai University) அவர்களை வரவேற்று அறிமுகம் செய்தார்கள்.நிறுவன உறுப்பினர் திரு.இராம.நாகப்பன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.சுமார் 11.30 மணியளவில் திரு.பழ.சபாரத்தினம் அவர்கள் முதற்கட்டமாக "நகரத்தார் பெருமைகளைப்" பற்றிய உரை நிகழ்த்தினார்கள்.செல்வி.காவேரி அருணாச்சலம் தாமாகவே மனமுவந்து பரதநாட்டிய நிகழ்ச்சியை வழங்கினார்.இரண்டாம் கட்டமாக "என் கண்ணில் கண்ணதாசன்" என்ற பகுதியில் முனைவர் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.பகல் 2.00 மணியளவில் மதிய விருந்து நடைபெற்றது.சுமார் 3.00 மணியளவில் செல்வி.சுபஸ்ரீ மற்றும் அனுஸ்ரீ மணிகண்டன் ஆகியோரின் "சிறுவர் நிகழ்ச்சியில்" Global Warming பற்றி மிக அழகாக விளக்கப் படங்களுடன்,தாமாகவே மனமுவந்து இந்நிகழ்வை அருமையாக நடத்தினார்கள்.செல்வன்.ஜெய் சுந்தர், செல்வி.அபர்ணா ரமேஷ்,செல்வி.மீனாள்,செல்வி அலமேலு ஆகியோரின் சிறுவர் நிகழ்ச்சியில், சந்தையில் புதிதாக வந்திருக்கும் விளம்பரம் மக்களுக்கு புரியாமல் இருப்பதை,மிக அழகாக,நகைச்சுவையோடும் தாமாகவே மனமுவந்து நடித்துக் காட்டினார்கள்.4.00 மணியளவில் குழந்தைகளுக்கான "நம்மை நாம் அறிவோம்" என்ற வினாடி-வினா நிகழ்ச்சியை திரு.மெ.மணிகண்டன் அவர்கள் வடிவமைத்து,திருமதி.ராஜேஸ்வரி சரவணன்,திருமதி.கோமதி நடராஜன்,திருமதி.மங்கை,திருமதி.ரெங்கநாயகி ஆகியோர் மிக அழகாக,குழந்தைகளுக்கு புரியும்படியாக நடத்திக் காட்டினார்கள்.இந்நிகழ்ச்சி குழந்தைகளிடையே நம் நகரத்தார் மரபுகளையும்,பழக்க வழக்கங்களையும்,பாரம்பரிய உணவுகளையும் பற்றிய விளக்கப் படங்களுடன் எடுத்துக்காட்டாக அமைந்தன.இக்கலந்துரையாடலில் 12 திருமணம் மற்றும் 2 கல்விக்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டன.திருமண நிதியுதவிக்கு ரூ.5,000/- மற்றும் கல்வி நிதியுதவிக்கு ரூ.2,000/- இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியிலிருந்து வழங்கப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மெஹந்தி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் திரு&திருமதி.மெ.மணிகண்டன் தம்பதியருக்கு "SONY - Home Theatre System" பரிசாக வழங்கப்பட்டன.புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள்.முனைவர்.பழ.சபாரத்தினம் அவர்களுக்கு பொன்னாடை போத்தி நினைவு பரிசு வழங்கப்பட்டது.சுமார் மாலை 5.00 மணிக்கு,சங்கத்தின் செயலாளர்,திரு.மு.சுவாமிநாதன் அவர்கள் நன்றியுரை வழங்க சங்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
/system/_temp/images/LordMurugan.jpg
132 Kalanthuraiyadal
Place  :   Dubai, Al jabeel Park
Function Date  :   18-Feb-2011
Uploaded Date  :   11AM, 24 Feb 2011

நமது ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் 132-வது கலந்துரையாடல் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் துபாய்-கராமாவில் உள்ள அல்-ஜபீல் பூங்காவில் 18.02.2011,வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் தொடங்கப்பெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக "கடவுள் வாழ்த்து" செல்வி.அபர்ணா ரமேஷ் பாடினார்."திருக்குறள் ஒப்புவித்தல்" நிகழ்ச்சியை செல்வன்.--------------------- வழங்கினார். "செல்வி.ஹரிணி ரமேஷ்ஷின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கேக் வெட்டப்பட்டன.வரவேற்புரை" மற்றும் தலைவர் உரையை சங்கத்தின் தலைவர்.திரு.வீர.அழகப்பன் அவர்கள் வழங்கினார்கள்.தாயகத்தில் இருந்து வருகை தந்த விருந்தினர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களின் உறவினர்கள் அனைவரும் அறிமுகம் செய்யப்பட்டார்கள்.நிகழ்ச்சியின் தொடக்கமாக விளையாட்டு போட்டிகள் ஆரம்பமாயின.முதாலவதாக "Hitting the pyramids" என்ற பந்து எறியும் நிகழ்ச்சியில் குழந்தைகள்,ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக போட்டிகள் நடைபெற்றன.குழந்தைகளுக்கான "Kho-Kho" and "Running Race" நிகழ்ச்சிகள் நடைபெற்றன.அடுத்ததாக "Aiming tha Gift" எனப்படும் வளையம் வீசும் நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.தம்பதியர்களுக்கான "Clipping the Partner" நிகழ்ச்சியில் அனைவரும் உற்சாகத்துடன் கலந்துக் கொண்டார்கள்.Bachelors-க்கான "Dodge Ball Game" என்ற விளையாட்டு போட்டி நடைபெற்றது.பெண்களுக்கான "Kho-Kho" போட்டி நடைபெற்றது.தாயகத்திலிருந்து வருகை தந்திருந்த விருந்தினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.பகல் சுமார் 2 மணியளவில் பகல் உணவு வழங்கப்பட்டது. அடுத்தபடியாக 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான "Pick and Collect the Choclates"நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குழந்தைகளுக்கான "Biscuit Eating" game நடைபெற்றது.மிகவும் சுவாரஸ்யமான நிகழ்ச்சியாக "Tug of War" விளையாட்டு போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு தரப்பினருக்கிடையே தனித்தனியாக நடைபெற்றன."வினாடி-வினா" நிகழ்ச்சியில் புது மாதிரியாக உறுப்பினர்கள் பிறந்த மாதங்களின்படி 4 அணிகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. "Bingo" எனப்படும் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு உடனுக்குடன் பரிசாக 100 மற்றும் 50 Dhs வழங்கப்பட்டன.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன."நன்றியுரை" சங்கத்தின் செயலாளர்.திரு.மு.சுவாமிநாதன் அவர்கள் வழங்க சங்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
/system/_temp/images/LordMurugan.jpg
131 Kalanthuraiyadal , New year Celebrations
Place  :   Sharjah, Kaththari Pannai
Function Date  :   01-Jan-2011
Uploaded Date  :   11AM, 19 Jan 2011

ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பின் 131-வது கலந்துரையாடல் மற்றும் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஷார்ஜாவில் உள்ள அல்-கத்தரி பண்ணை வீட்டில்(செட்டிநாடு விருந்தினர் இல்லத்தில்) 31.12.2010,வெள்ளிக்கிழமை அன்று மாலை 7.00 மணி முதல் தொடங்கப்பெற்றது.நிகழ்ச்சியின் தொடக்கமாக செல்வி.ஹரிணி ரமேஷ்"கடவுள் வாழ்த்து" பாடினார்."திருக்குறள் ஒப்புவித்தல்"நிகழ்ச்சியை செல்வன்.ஜெய் சுந்தர் வழங்கினார்.வரவேற்புரை செயலாளர்.திரு.மு.சுவாமிநாதன் வழங்க,தலைவர் உரை திரு.வீர.அழகப்பன் வழங்கினார்.விருந்தினர்கள் மற்றும் புதிய உறுப்பினர்கள் அறிமுகம் செய்யப்பட்டார்கள்.செல்வி.கண்ணாத்தாள் மற்றும் செல்வி.மெய்யம்மை,மீனாட்சி முத்துராமன்,சுபஸ்ரீ மற்றும் அனுஸ்ரீ மணிகண்டன் ஆகியோரின் நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.சுமார் 8 மணி முதல் விளையாட்டு நிகழ்ச்சிகள் ஆரம்பமாயின.குழந்தைகளுக்கான அறிவுத்திறன் நிகழ்ச்சியை செல்வி அபர்ணா ரமேஷ் வழங்கினார்.நகரத்தார் பற்றிய "வினாடி-வினா" நிகழ்ச்சியை திரு.இராம.நாகப்பன் வழங்கினார்.குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகளை கண்டவராயன்பட்டி,திரு.நடராஜன் வழங்கினார். ,Pick your Luck மற்றும்"ஸ்பாஞ்ச் ரிலே" நிகழ்ச்சிகள் திரு.இரமேஷ் முருகப்பன் நடத்தினார்கள்."தமிழில் பேசுவோம்" என்ற மொழி மாற்ற நிகழ்ச்சியை திரு.காசி விஸ்வநாதன் மற்றும் திரு.சிதம்பரம் ஆகியோர் இணைந்து வழங்கினார்கள்.சுமார் 12.00 மணியளவில் புத்தாண்டையொட்டி கேக் வெட்டப்பட்டு புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டன. திரு.இராம.நாகப்பன் அண்ணன் மற்றும் திரு.ந.லெட்சுமணன் அண்ணன் ஆகியோர் சங்க உறுப்பினர்களுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொண்டார்கள்.புத்தாண்டு வாழ்த்து கவிதையினை கவிஞர்.தியாகராஜன் அவர்கள் வழங்கினார்கள்.புத்தாண்டு வாழ்த்து பற்றிய "Power Point Presentation"-யை செல்வி.நந்தினி சிதம்பரம் மற்றும் ஸ்வாதி சிதம்பரம் ஆகியோர் இணைந்து வழங்கினார்கள். புத்தாண்டிற்கான அதிர்ஷ்ட குலுக்கல் தேர்ந்தெடுக்கப்பட்டு திரு-திருமதி.ராஜா கணேஷ் தம்பதியருக்கு 4 கிராம் அளவிலான தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.வழக்கம் போல் கல்வி நிதி உதவிகளுக்கு ரூபாய் 2000/- மற்றும் திருமண நிதி உதவிகளுக்கு ரூபாய் 49000/- வழங்கப்பட்டன.கோவில் கும்பாபிஷேக விழாவிற்கும்,நகர விடுதி கட்டுமான பணியிற்காகவும் சுமார் ரூ.10,000/- சங்கத்தின் சார்பாக வழங்கப்பட்டன. நள்ளிரவு 1.00 மணிக்கு தொடங்கப்பெற்ற "புர்ஜ் கலிஃபா" என்ற பொது அறிவு சார்ந்த நிகழ்ச்சியை அதிகாலை 2.40 மணி வரை திரு.ரமேஷ் முருகப்பன் அவர்கள் மிக அருமையாக தொகுத்து வழங்கினார்கள்.மிகச் சிறந்த இந்நிகழ்ச்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகத்துடன் பங்கு கொண்டார்கள்.அதன் பிறகு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கான பரிசுகள் அனைத்தையும் நன்கொடையாக திரு.அழ.உடையப்பன் வழங்கினார்கள்.சங்க நிகழ்ச்சிகளுக்கென புதிய "ஒலிபெருக்கி அமைப்பு" சங்கத்தின் சார்பாக வாங்கி முதல் முறையாக பயன்படுத்தப்பட்டது.அனைவருக்கும் நன்றியுரை தலைவர்.திரு.வீர.அழகப்பன் அவர்கள் வழங்க சங்க கூட்டம் இனிதே நிறைவுபெற்றது..
/system/_temp/images/LordMurugan.jpg
130 Kalanthuraiyadal
Place  :   Sharjah, Kaththari Pannai
Function Date  :   02-Dec-2010
Uploaded Date  :   11AM, 19 Jan 2011
நமது சங்கத்தின் 130-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி அல்-கத்தரி பண்ணை வீட்டில்(செட்டிநாடு இல்லம்) 02.12.2010, வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடைபெற்றது.கடவுள் வாழ்த்து நந்தினி சரவணன் பாடினார்.திருக்குறள் ஒப்புவித்தல் நிகழ்ச்சியை லலித் கோதண்ட ராமன் வழங்கினார்கள்.தலைவர் உரை திரு.வீர.அழகப்பன் அண்ணன் வழங்கினார்.இக்கலந்துரையாடல் நிகழ்ச்சியானது குழந்தைகள் தின விழாவாகக் கொண்டாடப்பெற்றது."சிந்தனை நேரம்" நிகழ்ச்சியை திரு.சித.மணிகண்டன் அவர்கள் வழங்கினார்கள்.சுமார் 11.00 மணியளவில் "வள்ளி இசையல்" என்ற நாடகம் திரு.R.முத்து மாணிக்கம் மற்றும் திரு.இராம.நாகப்பன் குழுவினரின் தலைமையில் நடைபெற்றது.பகல் 12.00 மணியளவில் செட்டிநாடு சூப் அனைவருக்கும் வழங்கப்பட்டது.அதன் பிறகு ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு மாறு வேடப் போட்டி நடைபெற்றது.ஐந்து முதல் பத்து வயது வரையிலான குழந்தைகளுக்கு பொது அறிவுத் திறன் மற்றும் விநாடி வினா நிகழ்ச்சிகளை திரு.மெ.மணிகண்டன் மற்றும் செல்வன்.சா.முத்துக் கருப்பன் வழங்கினார்கள்.குழந்தைகளின் சிந்தனைத் துளிகளை நாடக நகைச்சுவையாக சுபஸ்ரீ, அனுஸ்ரீமணிகண்டன் வழங்கினர்.2.00 மணியளவில் மதிய விருந்து நடைபெற்றது.அதன் பிறகு அபுதாபியில் இருந்து வருகை தந்த "ஏழு ஸ்வரங்கள் இன்னிசைக் குழுவின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.சங்கமம் தொலைக்காட்சி நிருபர் திரு.கலையன்பன் கலந்துக் கொண்டார்கள்.சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைவரையும் இசை வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள்.அதன் பிறகு சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் சிறப்புகள் குறித்து செயலாளர் திரு.சுவாமி நாதன் எடுத்துரைத்தார்கள்.அப்போது வந்திருந்த அனைத்துக் கல்வி மற்றும் திருமண நிதி உதவி விண்ணப்பங்களுக்கு அன்றே பண உதவியும் எல்லோராலும் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கல்விக்கு சுமார் 25,000.00 ரூபாய் மற்றும் திருமண நிதி உதவிகளுக்கு சுமார் 52,500.00 ரூபாய் பண உதவி செய்யப்பட்டது. நமது செட்டிநாட்டு இல்லத்தில் குழந்தைகளுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் ஒலி அமைப்பகம்(மைக் செட்) அமைப்பதற்கான முடிவும் எடுக்கப்பட்டது.புதிய உறுப்பினர்கள் அறிமுகம் திரு.மெ.மணிகண்டன் வழங்கினார்.அதிர்ஷ்ட குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலி தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு கொடுக்கப்பட்டது.இன்னிசை குழுவினர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.நன்றியுரை திரு.மு.சுவாமிநாதன் வழங்க சங்க கூட்டம் இனிதே நிறைவு பெற்றது.
http://lh5.ggpht.com/_3mSWpSEMqk4/TKiGv5-iNwE/AAAAAAAABPA/4upnay2ThH4/s160-c/01102010INK129thMeeting.jpg
129 Kalanthuraiyadal
Place  :   Dubai, Le Meridien
Function Date  :   01-Oct-2010
Uploaded Date  :   11AM, 13 Nov 2010
நமது சங்கத்தின் 129-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி, துபாயில் உள்ள லீ-மெரிடியன் உணவகத்தில் 01.10.2010 வெள்ளிகிழமை அன்று காலை 11.30 மணியளவில் நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் திரு.வீர.அழகப்பன் அவர்கள் தலைமை உரையாற்றினார்.சங்கத்தின் மூத்த நிறுவன உறுப்பினர் திரு.தே.முருகப்பண்ணன் அவர்கள் சங்கத்தின் வளர்ச்சி பற்றியும், உதவுபவர்களையும் பற்றி கூறி நன்றி தெரிவித்தார். கல்வி நிதி உதவி மற்றும் திருமண நிதி உதவிகளுக்கு இம்மாத உதவித் தொகையாக 1,33,500 ரூபாயாக (ஒரு இலட்சத்து நுப்பத்து மூன்று ஆயிரத்து ஐநூறு ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது.கூட்டமைப்பு தொடங்கியதிலிருந்து இன்று வரை வழங்கப்பட்ட உதவித் தொகைகள் ரூ.50,00,000 (ஐம்பது இலட்சம் மட்டும்) ஆகும். "மனித உளவியலில்" முனைவர் பட்டம் பெற்ற திரு.ரமேஷ் முருகப்பன் அவர்களை மூத்த நிறுவன உறுப்பினர் திரு.இராம. நாகப்பண்ணன் அவர்கள் வாழ்த்தி பாராட்டினார்கள். " நகரத்தார் சங்க இணையதளம்" அமைத்த விதம் குறித்து திரு.சி.சினிவாசன், திரு.செ.சுப்பிரமணியம், திரு.அ.சிதம்பரம் மற்றும் திரு.மெ.மணிகண்டன் ஆகியோர் சிறப்புற எடுத்துரைத்தனர். குழந்தைகள் நிகழ்ச்சியில் சுபஸ்ரீ மணிகண்டன் மற்றும் அனுஸ்ரீ மணிகண்டன் கலந்து கொண்டு அனைவரின் பாராட்டுதலையும் பெற்றனர். சென்னையில் உள்ள "Royce Infra Structure" நிறுவனத்திலிருந்து வருகை தந்த சிறப்பு விருந்தினர்கள், திரு.பனையப்பன், திரு.பழனியப்பன் மற்றும் திரு.இராம கிருஷ்ணன் ஆகியோர் உருவாக்கி விற்றுவரும் வீட்டு மனை நிலம் வாங்குவது குறித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
http://lh3.ggpht.com/_3mSWpSEMqk4/TJM1gw499GE/AAAAAAAABDo/j5iED_CB2ls/s160-c/20100710Ink127128Meeting.jpg
127&128 Kalanthuraiyadal
Place  :   Dubai, Jabel Ali Zone
Function Date  :   09-Jul-2010
Uploaded Date  :   7PM, 9 July 2010
127&128-வது கலந்துரையாடல் நிகழ்ச்சி 09.07.2010 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6 மணி அளவில் தொடங்கப்பட்டது. துபாயில் உள்ள "அமீரக நகைச்சுவை மன்றம்" சார்பாக பல்வேறு விதமான நகைச்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அனைவரும் மெய் மறந்து ரசித்து மகிழ்ந்தனர்"செட்டி நாட்டு மண் வாசனை கதைகள்" என்ற புத்தகம் நமது உறுப்பினர் அண.மணிகண்டன் அவர்கள் புதல்வனின் 3-வது பிறந்த நாளுக்காக அனைவருக்கும் வழங்கப்பட்டது.
/system/_temp/images/LordMurugan.jpg
Singam Film Show
Place  :   Dubai, Jabel Ali Zone
Function Date  :   04-Jun-2010
Uploaded Date  :   7PM, 8 December 2008
நமது சங்கத்தின் சார்பாக 04.06.2010 அன்று துபாயில் உள்ள ஜெபல்-அலி ஃப்ரீ சோனில்(FREE ZONE) டோனீயா திரையரங்கில் "சிங்கம்" என்ற திரைப்படம் நமது சங்க உறுப்பினர்களுக்காக திரையிடப்பட்டதை பெருமளவில் உறுப்பினர்கள் கண்டு மகிழ்ந்தனர் .
Close
xxxx

Contacts

Ramesh Ramanathan, 050-6767920
Muthuraman Kathiresan, 055-9006365
O.Rm.O. Ramanathan, 050-5372873
N.S. Gnanasambandhan, 055-6924501

Address:
The Secretary,
PO Box 27658,
Sharjah,
UAE

Email: Secretary@nagarathars.com

Need other nagarathar's contact?

Signup to receive Pettagam
e-magazine

Download e-magazine  Download

Send mail to Nagarathar Kootamaipu [INK]

Please fill in your contact information. * is mandatory.

Title:  
*
 
   *
To : UAENagaratharkootamaipu@yahoogroups.com
*
Send more friends details to make our sangam success

Close
asdfsd
mndnfsdfsdj